/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் தர்ணா
/
கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் தர்ணா
ADDED : ஜன 28, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மலைமாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்ல சட்டப்படி சீராய்வு மனு செய்ய கோரி வலியுறுத்தப்பட்டது.
மலைமாடுகள் வளர்ப்போர் சங்க தலைவர் கென்னடி, செயலாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் செல்வக்குமார், முருகன், பழனிச்சாமி, நடராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அதே இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்குப்பின் கலைந்து சென்றனர்.
இதே கோரிக்கையை வலியுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

