/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி ரயில்வே ஸ்டேஷன் அருகே பள்ளங்களில் தேங்கும் நீரால் அச்சம்
/
தேனி ரயில்வே ஸ்டேஷன் அருகே பள்ளங்களில் தேங்கும் நீரால் அச்சம்
தேனி ரயில்வே ஸ்டேஷன் அருகே பள்ளங்களில் தேங்கும் நீரால் அச்சம்
தேனி ரயில்வே ஸ்டேஷன் அருகே பள்ளங்களில் தேங்கும் நீரால் அச்சம்
ADDED : ஆக 15, 2025 02:42 AM

தேனி: தேனி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பள்ளத்தில் தேங்கும் மழைநீரால் உயிரிழப்பு அபாயம் உள்ளதால் பள்ளங்களை சுற்றிவேலி அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி ரயில்வே ஸ்டேஷனில் குட்ஸ்ஷேட் அருகே ரயில்வே பணிகள் நடந்த போது பணிக்காக மண் எடுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. மழை பெய்தால் அந்த பள்ளங்கள் முழுவதும் நீர் நிரம்பி குளம் போல் காட்சியளிக்கிறது.
இந்த பள்ளத்தில் மூழ்கி இரு பள்ளி மாணவர்கள், ஒரு முதியவர் சில ஆண்டுகளுக்கு முன் பலியாகி உள்ளனர். ஆனால் அந்த பள்ளத்தை மூடுவதற்கோ, சீரமைக்கவோ ரயில்வே, மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் நாட்களில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பள்ளங்களில் நீர் இருப்பு அதிகரிக்கும். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் ஆபத்தான அந்த பள்ளங்களை மூட வேண்டும், பள்ளங்களைச்சுற்றி வேலி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.