/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆடு, மாடு, கோழிகளுக்கு வெயிலால் காய்ச்சல் அதிகரிப்பு
/
ஆடு, மாடு, கோழிகளுக்கு வெயிலால் காய்ச்சல் அதிகரிப்பு
ஆடு, மாடு, கோழிகளுக்கு வெயிலால் காய்ச்சல் அதிகரிப்பு
ஆடு, மாடு, கோழிகளுக்கு வெயிலால் காய்ச்சல் அதிகரிப்பு
ADDED : ஏப் 26, 2025 05:32 AM
கம்பம் : பசுக்கள், கோழிகள், நாய்களுக்கு வெயிலால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கால்நடை மருந்தகத்தில் டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் காரணமாக ஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கும் ஒரு வித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாடுகள் உள்ளிட்ட உயிரினங்கள் தீவனங்கள் எடுக்காமல் உள்ளன.
கம்பம் கால்நடை மருந்தகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடு , கோழிகளுக்கு ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. 'ஆன்டி டிரெஸ்' எனப்படும் மருந்து வழங்கப்படுகிறது.
கால்நடை டாக்டர் செல்வம் கூறுகையில் , அதிக வெயில் காற்று இல்லாமல் அடிப்பதால் ஆடு, மாடுகளுக்கு காய்ச்சல் பரவுகிறது. ஊசி மருந்து செலுத்தியவுடன் காய்ச்சல் குறைகிறது. 'சிரப்' கொடுத்து விடுகின்றோம். காலை, மாலை 50 மில்லி வீதம் அதை கொடுக்க வேண்டும். மாலையில் தண்ணீர் வைக்க வேண்டும். பகலில் தண்ணீர்குடிக்காது .
நிழலில், நல்ல காற்றோட்டமான இடங்களில் மாடுகளை கட்டி வைக்க வேண்டும், மாடுகள் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களுக்கும் காய்ச்சல் பாதித்தால் 3 நாட்களில் சரியாகி விடுகிறது.
பயப்படத் தேவையில்லை. வீடுகளில் மாடு, ஆடு, கோழிகளுக்கு காய்ச்சல் இருந்தால் அருகில்உள்ள கால்நடை நிலையங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.