ADDED : ஜன 24, 2025 05:24 AM

உத்தமபாளையம்: உத்தமபாளையம் நீதிமன்றம் அருகில் பைனான்சியர் பிரசாந்த் 34, என்பவர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியை சேர்ந்தவர் தொந்தி மகன் பிரசாந்த் 34, இவர் சொந்த ஊர் அனுமந்தன்பட்டி. 10 ஆண்டுகளுக்கு முன் உத்தமபாளையத்தில் குடியேறி பைனான்ஸ் தொழில் செய்தார்.
இதே காலனியை சேர்ந்த அனிஷ் ரகுமான் என்ற முனீஸ்வரன் 42 என்பவருக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இருவருக்கும் இடையே பல முறை தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 8:00 மணியளவில் உத்தமபாளையம் நீதிமன்றம் முனீஸ்வரன் கோயிலில் அருகில் பிரசாந்த் நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த அனிஷ், 'எனது குடும்பத்தை கெடுத்த உன்னை, கொல்லாமல் விட மாட்டேன்' என கூறி கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் பயந்து பிரசாந்த நீதிமன்றம் நோக்கி ஒடினார்.
பின் கோர்ட் அருகில் உள்ள லாட்ஜ் கார் நிறுத்தும் இடத்திற்குள் ஓடியுள்ளார். அவரை துரத்தி வந்த அனிஷ், லாட்ஜ் பகுதியில் உடலில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். கொலை செய்த அனிஷ் அங்கிருந்து தப்பியோடினார்.
உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டு வேலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரிக்கின்றனர்.

