/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சப் கலெக்டர் உத்தரவால் ரோட்டை சீரமைத்த தீயணைப்பு துறை
/
சப் கலெக்டர் உத்தரவால் ரோட்டை சீரமைத்த தீயணைப்பு துறை
சப் கலெக்டர் உத்தரவால் ரோட்டை சீரமைத்த தீயணைப்பு துறை
சப் கலெக்டர் உத்தரவால் ரோட்டை சீரமைத்த தீயணைப்பு துறை
ADDED : செப் 04, 2025 11:50 PM

மூணாறு,: தேவிகுளம் இறைச்சல்பாறை பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் விபத்தை தவிர்க்கும் வகையில் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சியடித்து சுத்தம் செய்தனர்.
மூணாறு அருகே தேவிகுளம் இறைச்சல் பாறையில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி பகுதியில் 2024 ஜூலை 30ல் மண் சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாக பீதியுடன் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக பெய்த பருவ மழையின்போது மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் அவ்வப்போது மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு ரோடு சேறும், சகதியுமாக மாறி விபத்து அபாயம் ஏற்பட்ட நிலையில் சில டூவீலர்கள் விபத்துகளில் சிக்கின. அதனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அப்பிரச்னையில் தேவிகுளம் சப் கலெக்டர் ஆர்யா தலையிட்டார்.
அவரது உத்தரவுபடி மூணாறு தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சிடியத்து சேறு, சகதி ஆகியவற்றை சுத்தம் செய்து ரோட்டை சீரமைத்தனர்.