/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டாசு கடைகளில் குண்டு பல்புகள் பயன்படுத்த கூடாது தீயணைப்பு அலுவலர் ஆலோசனை

ADDED : அக் 16, 2024 05:18 AM

தேனி : பட்டாசு கடைகளில் விபத்தை ஏற்படுத்தும் குண்டு பல்புகள் பயன்படுத்த கூடாது.'என மாவட்டத் தீயணைப்புத்துறை அலுவலர் விவேகானந்தன் தெரிவித்தார்.
மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணித்துறை, நிரந்தர பட்டாசு கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தேனியில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் ஷேக்மீரான், பொருளாளர் தினேஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட உதவி அலுவலர் கீதாராணி வரவேற்றார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் பேசியதாவது: பட்டாசு கடைகளில் அதிக வெப்பத்தை கடத்தும் குண்டு பல்புகளை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக வெப்பத்தை எளிதில் கடத்தாத சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்த வேண்டும். சி.எப்.எல்., பல்புகள் திறன் அதிகரித்த வெப்பக்கடத்தி கிடையாது.
அதனால் விபத்து நடக்க வாய்ப்பு குறைவு. 9 மீட்டருக்கு குறைவாகவும், 25 மீட்டருக்கு அதிகமாகவும் கடை வைத்திருந்தால் என்.ஓ.சி., தர இயலாது. சிறியவர்கள், வயதில் மூத்தவர்களை கடையில் அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக தீயணைப்பு வண்டிகள் எளிதாக கடையை அடையும் வழி உள்ள இடத்தில் கடைகள் அமைப்பது அவசியம்', என்றார்.