UPDATED : நவ 04, 2026 01:17 PM
ADDED : நவ 04, 2026 01:15 PM
அ நிறம் | அளவு
தேனி: தீபாவளியை முன்னிட்டு அரசு பஸ்களில் பட்டாசு எடுத்து செல்ல கூடாது என போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: இவ்வாண்டு அரசு பஸ்களில் பட்டாசு எடுத்து செல்வதை கன்டக்டர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிக்கின்றனர். பயணிகள் பட்டாசுகளை அரசு பஸ்களில் எடுத்து செல்ல வேண்டாம். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றனர். தனியார் பஸ்களில் பட்டாசுகள் தேனிக்கு விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன. அவற்றை கண்காணிக்க ஆர்.டி.ஓ., தலைமையில் தனிக்குழுக்கள் சோதனை நடத்த வேண்டும்.
