/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீயணைப்பு வீரர்கள் மீட்பு ஒத்திகை பயிற்சி
/
தீயணைப்பு வீரர்கள் மீட்பு ஒத்திகை பயிற்சி
ADDED : செப் 27, 2024 07:31 AM

--பெரியகுளம்: வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் பொதுமக்கள் எவ்வாறு தப்பிப்பது என தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்
வடகிழக்கு பருவமழை காலங்களில் ஆறுகளில் வெள்ளத்தில் மக்கள் சிக்கிக் கொண்டால் எவ்வாறு தப்பிப்பது என காந்திநகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் பெரியகுளம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பாக செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தர்மராஜ், முத்து செல்வம் தலைமையில் வீரர்கள் செய்து காண்பித்தனர். தெர்மாகோல் அட்டை, பிளாஸ்டிக் குடம், பிளாஸ்டிக் பாட்டில் உட்பட பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
வராகநதி அருகேயுள்ள பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த மக்களிடத்தில் ஒத்திகை செய்யப்பட்டது.-