/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுகாதாரக்கேடு அபாயத்தில் சமதள குடிநீர் தொட்டி
/
சுகாதாரக்கேடு அபாயத்தில் சமதள குடிநீர் தொட்டி
ADDED : ஜன 15, 2024 11:28 PM

பெரியகுளம் : வடுகபட்டி பேரூராட்சியில் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்தின் சார்பில், சமதள பகுதியில் அமைக்கப்பட்ட தொட்டி திறந்த நிலையிலும், அருகே குப்பைத் தொட்டி உள்ளதால் குடிநீர் சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் பாதுகாப்பின்றி உள்ளது.
இப்பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். தாமரைக்குளம் கண்மாய் உறைகிணறு, வைகை அணை, சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஆனால் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து பாதியளவே வினியோகம் செய்வதால் அவ்வப்போது செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில் பெரியகுளம்- வடுகபட்டி ரோடு அறுவை மில் அருகே சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தொட்டியில் தேங்கும் நீரில் மூடி இல்லை. இதன் அருகே குப்பை கொட்டப்படுகிறது. காற்று வீசும் போது குப்பை திறந்தவெளி தொட்டியில் விழுகிறது.
இதனால் வடுகபட்டி பேரூராட்சிக்கான குடிநீரில் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாய நிலை தொடர்கிறது.
டெங்கு பரவி வரும் நிலையில் குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக திறந்த தொட்டியில் மூடி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.