/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் ஊராட்சிகளின் உறை கிணறுகள் முழ்கியது கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ADDED : டிச 14, 2024 05:06 AM
கம்பம் : பலத்த மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. முல்லைப் பெரியாற்றித் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பம்பிங் செய்யும் உறை கிணறுகள் மூழ்கியுள்ளது.
இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர் மட்டம் 124 அடியாக உயர்த்துள்ளது. விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வரத்து உள்ளது.
இதற்கிடையே மேகமலை பகுதியில் பெய்து வரும் கன மழையால் வெள்ள நீர்அருவி வழியாக முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. இரங்கலாறு அணையில் இருந்து விநாடிக்கு 141 கன அடி எடுக்கப்பட்டு சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
காட்டாற்று வெள்ளம், சுருளி அருவி வெள்ள நீர் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் என்று முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
இதனால் கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுவதால், கம்பம் முதல் வீரபாண்டி வரை ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள 50 க்கும் மேற்பட்ட குடிநீர் பம்பிங் செய்யும் உறை கிணறுகள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளது.
சுருளிப் பட்டி ஆற்றில் உள்ள நாராயணத்தேவன்பட்டி சுருளிப்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, உள்ளிட்ட ஊராட்சிகளின் உறை கிணறுகள், கம்பம் நகராட்சி மற்றும் பல பேரூராட்சிகளின் உறை கிணறுகளும் மூழ்கி உள்ளது இதனால் குடிநீர் பம்பிங் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.