/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு மாடுகள், யானைகள் ஒன்றாக நடமாட்டம்
/
காட்டு மாடுகள், யானைகள் ஒன்றாக நடமாட்டம்
ADDED : ஆக 21, 2025 08:19 AM

மூணாறு : குண்டளை எஸ்டேட் பகுதியில் உள்ள 'கோல்ப்' மைதானத்தில் காட்டு மாடுகள், யானைகள் ஆகியவை ஒன்றாக நடமாடியதை பார்த்து சுற்றுலாப் பயணிகள் அதிசயித்தனர்.
மூணாறு அருகே குண்டளை, எல்லப்பட்டி ஆகிய எஸ்டேட்டுகள், சான்டோஸ் காலனி ஆகிய பகுதிகளில் நான்கு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் கடந்த ஒரு வாரமாக நடமாடி வருகின்றன. அவை நேற்று காலை குண்டளை எஸ்டேட் பகுதியில் உள்ள 'கோல்ப்' மைதானத்திற்கு சென்றன. மைதானத்தில் நன்கு புல் வளர்ந்துள்ளதால் தீவனத்திற்காக தினமும் நுாற்றுக் கணக்கில் காட்டு மாடுகள் முகாமிட்டு வருகின்றன. அவற்றின் அருகே யானைகள் புற்களை தின்றவாறு நடமாடின.
அதனை உள்ளூர் மக்கள், சில சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் பார்த்து அதிசயித்ததுடன், அச்சமும் அடைந்தனர்.