/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
/
ஆண்டிபட்டி மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
ஆண்டிபட்டி மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
ஆண்டிபட்டி மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
ADDED : செப் 22, 2024 01:45 AM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஏத்தகோவில் கிராமத்தில் மலையை ஒட்டிய பகுதியில் யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்து விழிப்புடன் இருக்க எச்சரித்துள்ளனர்.
ஆண்டிபட்டியில் இருந்து 5 கி.மீ.,தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது ஏத்தக்கோவில் கிராமம். வழக்கமாக சபரிமலை சீசனில் மலையிலிருந்து யானைகள் ஏத்தக் கோவில் பகுதிகளுக்கும் வந்து செல்லும். ஆனால் இந்த ஆண்டு இப்போதே யானைகள் நடமாட்டம் உள்ளது.
ஆண்டிபட்டி வனச்சரகர் அருண்குமார் கூறியதாவது:
ஏத்தக்கோவில் கிராமம் ஒண்டிவீரன் கோயில் அருகே யானைகள் வந்து சென்றதற்கான தடயங்கள் உள்ளது. செப்., 16ல் யானைகள் வந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மலைப்பகுதியில் இருந்து சில கி.மீ., தூரம் தரைப்பகுதியில் நிலங்கள் இருக்க வேண்டும். இப்பகுதியில் அவ்வாறு இல்லை. காப்புக்காட்டை ஒட்டிய நிலங்களை சுற்றி முள் கற்றாழை, சோற்று கற்றாழை போன்ற உயிரி வேலிகளை அமைக்க வேண்டும்.
நிலங்களில் மா, தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு பதிலாக மாற்றுப் பயிர்கள் தேர்வு செய்யலாம்.
வீடியோ, போட்டோ எடுக்க கூடாது
யானைகள் விளை நிலங்களுக்கு வந்தால் விவசாயிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வனத்துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் போது வனப் பணியாளர்களுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
யானைகளை கண்டால் புகைப்படம், வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். விளை நிலங்களை பாதுகாக்க அமைக்கப்படும் திருட்டு மின்வேலி வனவிலங்குகளுக்கு ஆபத்தாகி விடும். அவ்வாறு அமைப்பது குற்றமாகும்.
சத்தமாக ஒலி எழுப்புதல், வெடி வெடித்தல், வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.