/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்னாள் எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி: முழு கடை அடைப்பு
/
முன்னாள் எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி: முழு கடை அடைப்பு
முன்னாள் எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி: முழு கடை அடைப்பு
முன்னாள் எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி: முழு கடை அடைப்பு
ADDED : அக் 06, 2024 03:53 AM
கம்பம் : கம்பத்தில் நேற்று முன்தினம் காலமான முன்னாள் எம்.எல்.ஏ. உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் கம்பத்தில் நேற்று கடை அடைப்பு நடைபெற்றது.
கம்பம் சட்டசபைப தொகுதியில் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல். ஏ. வாக இருந்த ஒ. ஆர். இராமச்சந்திரன் 79, நேற்று முன்தினம் தனது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும் நிர்வாகிகளும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. விற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கம்பம் வர்த்தக சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று நகரில் உள்ள அனைத்து கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் கடைகள் அடைக்கப்பட்டது. சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. நேற்று பிற்பகல் நல்லடக்கம் நடைபெற்றது.