ADDED : ஜூன் 28, 2025 11:54 PM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே காட்ரோடு தென்றல் நகரைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சுரேஷ்குமார் 42. இவரது மனைவி பிரகதீஸ்வரி 34. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சுரேஷ்குமார் மது போதைக்கு அடிமையானதால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் பிரகதீஸ்வரி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். தேனி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு நடக்கிறது.
இந்நிலையில் சுரேஷ்குமார் குடும்பம் நடத்த பிரகதீஸ்வரியை அழைத்துள்ளார். பெரியகுளம் விளையாட்டு மைதானம் பகுதியில் அதிகளவில் மது குடித்த சுரேஷ்குமார் மயங்கினார். இவரது தங்கை மகன்கள் விஜய் சூர்யா, குரு கிருஷ்ணகுமாரை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சுரேஷ்குமாரை துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-