ADDED : பிப் 18, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி எஸ்.பி., அலுவலகம் முன் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் சங்கிலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கூடலுாரில் பலியான ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும் கோஷமிட்டனர். தொடர்ந்து எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.