/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
122 மதுபாட்டில்கள் பதுக்கிய நால்வர் கைது
/
122 மதுபாட்டில்கள் பதுக்கிய நால்வர் கைது
ADDED : ஜூன் 10, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., முருகானந்தம் தலைமையிலான போலீசார் எரசக்க நாயக்கனுார் முதல் பூசாரனம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
குமணன்தொழு மணிகண்டன் 57, ஆனைமலையான்பட்டி செந்தில்குமார் 48, ஓடைப்பட்டி டாஸ்மாக் கடை முன் வருஷநாடு காமராஜபுரம் ராஜபாண்டி 30, கருநாக்கமுத்தன்பட்டி பேச்சியம்மாள் 60 விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தனர்.
போலீசார் மணிகண்டன், செந்தில்குமார், ராஜபாண்டி, பேச்சியம்மாள் உள்ளிட்ட நால்வரை கைது செய்து, 122 மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.