/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு மேலும் குறைப்பு
/
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு மேலும் குறைப்பு
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு மேலும் குறைப்பு
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு மேலும் குறைப்பு
ADDED : மார் 16, 2024 06:29 AM
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 480 கன அடியாக குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் மழையின்றி நீர்வரத்து குறைந்தது. கடுமையான வெப்பத்தால் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வந்தது. இரண்டாம் போக நெல் சாகுபடி முடிவுக்கு வந்த நிலையில் தமிழகப் பகுதிக்கு மார்ச் 9ல் நீர் திறப்பு 105 கன அடியில் இருந்து 1227 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கூடுதல் தண்ணீர் திறப்பால் ஜூனில் துவங்க உள்ள முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மார்ச் 11 ல் ஆயிரம் கன அடியாகவும், மார்ச் 12ல் 911, மார்ச் 13ல் 822 என தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று 480 கன அடியாக மேலும் குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 119 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 2448 மில்லியன் கன அடியாகும்.நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 73 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 64 ஆக குறைந்தது.

