/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்க கம்பம் விவசாயிகள் வலியுறுத்தல்
/
நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்க கம்பம் விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்க கம்பம் விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்க கம்பம் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 03, 2024 06:59 AM
கம்பம்; கம்பம் பள்ளத்தாக்கில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் இருபோக நெல் சாகுபடியும், ஒரு போக சாகுபடி 5100 ஏக்கரில் நடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து குறிப்பிட்ட சில ரகங்களை மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். சமீபகாலமாக கார்ப்பரேட் கம்பெனிகளின் வீரிய ஒட்டு ரகங்கள் விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யப்படுகிறது. அதிக மகசூல் என்ற ஒற்றை காரணத்திற்காக வீரிய ஒட்டு ரக விதைகளை சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.
ஆனால் சாகுபடி செய்த வீரிய ஒட்டுரக விதை நெல்லில் ஏதாவது பிரச்னை என்றால், சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.
காரணம் வீரிய ஒட்டு ரகங்கள் தமிழக வேளாண் துறையின் தரக்கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் வரவில்லை. தொடர்ந்து நோய் தாக்குதல், புதிய ரகங்கள் கிடைக்கதது. நவீன தொழில்நுட்பங்கள் கிடைக்காத நிலை உள்ளது.
எனவே கம்பம் பள்ளத்தாக்கில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்க விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை நிறைவேறவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ராமகிருஷ்ணன், நெல் ஆராய்ச்சி நிலையம் கொண்டுவருவேன் என வாக்குறுதி அளித்திருந்தார்.
அவரும் இது பற்றி கண்டுகொள்ளவில்லை. எனவே கம்பம் பள்ளத்தாக்கில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.