ADDED : ஜூலை 21, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி வன கோட்டத்திற்கு வால்கரடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பை அகற்றும் முகாம் நடந்தது. மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தலைமை வகித்தார்.
தேனி நாடார் சரஸ்வதி பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், தன்னார்வலர்கள், நகராட்சி துாய்மைப் பணியாளர்கள், வனப் பணியாளர்கள் பங்கேற்றனர். சுமார் 3 டன் கழிவுகள் தேனி நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணவர்களுக்கு, அலுவலர்கள் விளக்கினர்.