/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டக்காவலாளி பலி வழக்கு: வனவர், வனக்காவலர் கைது
/
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டக்காவலாளி பலி வழக்கு: வனவர், வனக்காவலர் கைது
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டக்காவலாளி பலி வழக்கு: வனவர், வனக்காவலர் கைது
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டக்காவலாளி பலி வழக்கு: வனவர், வனக்காவலர் கைது
ADDED : மார் 01, 2024 01:22 AM
கூடலுார்:தேனி மாவட்டம் கூடலுார் வனப்பகுதியில் 2023 அக்.,ல் இரவு வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டத்தில், குள்ளப்பக்கவுண்டன்பட்டி தோட்டக் காவலாளி ஈஸ்வரன் 55, பலியான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி வனவர் திருமுருகன், வனக்காவலர் ஜார்ஜ்குட்டி (எ) பென்னியை போலீசார் கைது செய்தனர்.
வண்ணாத்திப்பாறை காப்புக்காட்டில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கூடலுார் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர், வனக்காவலர் அடங்கிய 6 பேர் குழுவினர் 2023 அக்., 28 ல் இரவு 2 குழுக்களாக பிரிந்து, யானைப்புகா அகழி வழியாக முடநாரி புதுப்பாலம் நோக்கி ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். அங்கு சோதனையிட்ட வனத்துறையினர் குள்ளப்பக்கவுண்டன்பட்டியை சேர்ந்த தோட்டக் காவலாளி ஈஸ்வரன் 55, இருந்ததை கண்டறிந்தனர். தோட்டக் காவலாளிக்கும் வனத்துறையினருக்கும் ஏற்பட்ட தகராறில் வனவர் திருமுருகன் துப்பாக்கியால் சுட்டதில் ஈஸ்வரன் பலியானார்.ரேஞ்சர் முரளிதரன் லோயர்கேம்ப் போலீசில் புகார் அளித்தார். அதில், 'ஈஸ்வரன் வனத்துறையினரை கத்தியால் குத்த முயன்றதால் ஏற்பட்ட தகராறில் தற்காப்பிற்காக சுடப்பட்டு மயங்கி விழுந்து பலியானார்,' என, தெரிவிக்கப்பட்டது. ஈஸ்வரனின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து தீவிர விசாரணை நடத்த கோரினர்.
இந்நிலையில் வனவர், வனக்காவலர் மீது 8 நாட்களுக்கு முன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று வனவர் திருமுருகன், வனக்காவலர் ஜார்ஜ்குட்டி (எ) பென்னியை கைது செய்தனர்.

