/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கவுமாரியம்மன் கோயில் மறுபூஜை; பால்குடம் எடுத்த பக்தர்கள்
/
கவுமாரியம்மன் கோயில் மறுபூஜை; பால்குடம் எடுத்த பக்தர்கள்
கவுமாரியம்மன் கோயில் மறுபூஜை; பால்குடம் எடுத்த பக்தர்கள்
கவுமாரியம்மன் கோயில் மறுபூஜை; பால்குடம் எடுத்த பக்தர்கள்
ADDED : ஜூலை 23, 2025 12:30 AM

பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இக்கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் திருவிழா ஜூலை 16 வரை நடந்தது. பத்து நாட்கள் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று மறுபூஜையை முன்னிட்டு தீர்த்ததொட்டியில் பக்தர்கள் குவிந்தனர். மேளம், தாளம் இசைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்து ஆடியபடி கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.