/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்; யாகசலை பூஜைகள் துவங்கியது
/
ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்; யாகசலை பூஜைகள் துவங்கியது
ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்; யாகசலை பூஜைகள் துவங்கியது
ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்; யாகசலை பூஜைகள் துவங்கியது
ADDED : மார் 16, 2024 06:26 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் 19 ஆண்டுகளுக்கு பின் ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் மார்ச் 20 ல் நடைபெறுகிறது. நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கியது.
இக்கோயில் முல்லைப் பெரியாற்றங் கரையில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்வதும், நதிக்கரையில் கோயில் கிழக்கு திசை பார்த்து அமைவதும் காசியில் உள்ளதென்றும், அதே போன்ற அமைப்பில் இங்கு காளாத்தீஸ்வரர் கோயில் இருப்பதாக மெய்யன்பர்கள் கூறுகின்றனர். தென் காளஹஸ்தி என்றழைக்கப்படும் இந்த கோயில் ராகு, கேது, கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. இங்கு ராகு, கேது பகவான்கள் தனித் தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியிருப்பதும் சிறப்பாகும். ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலத்தில் இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வருகின்றனர். இக் கோயில் திருப்பணி,கும்பாபிஷேகம் 2004 ல் நடந்தது.
அதன் பின் 19 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தற்போது திருப்பணி உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேகம் மார்ச் 20 ல் நடைபெறுகிறது.யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கியது. அனுக்கை , யஜமான் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாவாசனம், தன பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மார்ச் 17 ல் முதல் கால யாக பூஜை, மார்ச் 18 காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை, 19 ல் நான்காம் கால யாக பூஜை, மாலை ஐந்தாம் கால யாக பூஜை, மார்ச் 20 காலை ஆறாம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது.
அன்று காலை 9:30 முதல் 10: 30 மணிக்குள் கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுரத்தில் வைக்கப்படவுள்ள 22 கலசங்கள் பொதுமக்கள் தரிசனத்திற்கென நேற்று வீதி உலா வந்தது. கும்பாபிஷேக விழா துவங்கியதால் நகரம் விழாக்கோலம் கண்டுள்ளது.

