/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திண்டுக்கல்- லோயர்கேம்ப் ரயில் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தல் அரசு ஊழியர் சங்கம் தீர்மானம்

ADDED : நவ 24, 2024 07:13 AM

தேனி : திண்டுக்கல்- லோயர்கேம்ப் ரயில்பாதை திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு நிர்பந்திக்க வேண்டும் என தேனியில் நடந்த அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி திருமலை நகர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரங்கில் அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் நாகராஜ் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் செல்வம், துணைப்பொதுச்செயாளர் மாவட்ட செயலாளர் தாஜூதீன், பொருளாளர் முத்துக்குமார், துணைத்தலைவர்கள் ராமகிருஷ்ணன்,தமிழ்பரமன், இணைச்செயலாளர்கள் அழகுராஜூ, மலர்கொடி, விமல், நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் திண்டுக்கல்- லோயர்கேம்ப் ரயில்பாதை திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு நிர்பந்திக்க வேண்டும். சென்னை ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தை தவிர்க்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.