UPDATED : நவ 21, 2026 06:32 PM
ADDED : நவ 21, 2026 06:32 PM

அ நிறம் | அளவு
தேனி: தேனி ஐ.டி.ஐ.,யில் பட்டமளிப்பு விழா மாவட்ட வேலை வாய்ப்பு, பயிற்சி துறை சார்பில் நடந்தது.
ஐ.டி.ஐ., முதல்வர் அசோகன் தலைமை வகித்தார். மண்டல பயிற்சி இணை இயக்குனர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு அலுவலர் ரமாபிரபா, ஐ.டி.ஐ., அலுவலர் சண்முகவதி ஆகியோர் மாணவர்கள் 400 பேருக்கு பட்டங்கள் வழங்கினர். மாநில அளவில் 3ம் இடம் பிடித்த மாணவர் ஹரிஹரனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஐ.எம்.சி., தலைவர் அரவிந்த், உதவி இயக்குனர் பாஸ்கரன், தேனி ஐ.டி.ஐ., நிர்வாக அலுவலர் மணிகண்டன், பயிற்சி அலுவலர் அன்பரசன், வெள்ளச்சாமி, குபேந்திரன், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
