/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு டவுன் பஸ் புதிய வழித்தடம் துவக்க விழா
/
அரசு டவுன் பஸ் புதிய வழித்தடம் துவக்க விழா
ADDED : ஜூலை 09, 2025 07:15 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், ரோசனப்பட்டி வழியாக தேனி செல்லும் அரசு டவுன் பஸ் புதிய வழித்தடம் துவக்க விழா நடந்தது. இக்கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் வசதி ஏற்படுத்த மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டியில் இருந்து காலை 7:20 மணிக்கு ஆசாரிப்பட்டி, ரோசனப்பட்டி ஒக்கரைப்பட்டி, எரதிமக்காள்பட்டி, எம்.சுப்புலாபுரம் வழியாக தேனிக்கும், மாலை 4:20 மணிக்கு தேனியில் இருந்து க.விலக்கு, எம்.சுப்புலாபுரம், ஒக்கரைப்பட்டி, ரோசனப்பட்டி, ஆசாரிப்பட்டி, வழியாக ஆண்டிபட்டிக்கும் புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் துவக்கப்பட்டுள்ளது. எம்.பி.,தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ., மகாராஜன் ஆகியோர் புதிய வழித்தடத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர் செயலாளர் சரவணன், ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மணிவண்ணன், அரசு போக்குவரத்து கழக தேனி கோட்ட மேலாளர் ஜெகதீசன், கிளை மேலாளர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

