/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கவர்னர் ரவி இன்று தேனி வருகை கருப்புக்கொடி காட்ட அனுமதி மறுப்பு
/
கவர்னர் ரவி இன்று தேனி வருகை கருப்புக்கொடி காட்ட அனுமதி மறுப்பு
கவர்னர் ரவி இன்று தேனி வருகை கருப்புக்கொடி காட்ட அனுமதி மறுப்பு
கவர்னர் ரவி இன்று தேனி வருகை கருப்புக்கொடி காட்ட அனுமதி மறுப்பு
ADDED : பிப் 08, 2024 02:20 AM
தேனி:தேனிக்கு கவர்னர் ரவி இன்று வரும் நிலையில் தமிழக அரசுடன் மோதல் போக்குடன் செயல்படும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட், வி.சி.க., நாம் தமிழர் கட்சியினர் கருப்பு கொடி காட்ட அனுமதி கேட்டதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் கவர்னர் ரவியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளது. பின்னர் மதியம் 12:10 மணிக்கு அவர் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதன்பின் ராயப்பன்பட்டி திராட்சை ஆராயச்சி நிலையம் சென்று மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு, மதுரை விமான நிலையம் செல்கிறார்.
இதனையொட்டி சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம், பின்னர் சாலை மார்க்கமாக தேனிக்கு வரும் கவர்னர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டுவதற்கு காங்கிரஸ், வி.சி.க., நாம்தமிழர் அரசியல் கட்சியினர் அனுமதிகோரி போலீஸ் ஸ்டேஷன்களில் மனு அளித்திருந்தனர்.
ஆனால் அதற்கு அனுமதி மறுத்த போலீசார் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
தேனி எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள் 7 டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் கண்காணிப்பில் 1170 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

