ADDED : ஜூன் 15, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தேனி மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஓட்டலில் நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட், தலைவர் தங்கவேலு, நிர்வாகிகள் மணிகண்டன், சந்திரசேகரன், பாரதிவளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இறந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை உடன நடத்த வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.