/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டதாரிகள் தொழில் துவங்க ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
/
பட்டதாரிகள் தொழில் துவங்க ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
பட்டதாரிகள் தொழில் துவங்க ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
பட்டதாரிகள் தொழில் துவங்க ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
ADDED : நவ 12, 2024 05:44 AM
கம்பம்: பட்டதாரிகளுக்கு தொழில் துவங்க அரசு ரூ.1 லட்சத்தை ஊக்கத் தொகையாக வழங்குகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்று வேளாண் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
வேளாண்,தோட்டக்கலை பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப கல்வியாக இருந்தபோதும் வேலையில்லாமல் திண்டாடும் அதிகரித்து வருகிறது.
எனவே, அரசு வேலையை மட்டும் எதிர்பார்க்காமல், வேளாண் சார்ந்த தொழில்கள் துவங்க அரசு ஊக்கப்படுத்த திட்டமிட்டது. இதற்கென வேளாண், தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்க சில ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. அவர்கள் வங்கிகளில் தொழில் துவங்க கடன் பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு அரசின் ஊக்கத்தொகை ரூபாய் ஒரு லட்சத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு உதவி இயக்குநர்களில் கடந்தாண்டு கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் வட்டாரங்களுக்கு இந்நிதி வழங்கப்பட்டது.
இந்தாண்டு போடி, பெரியகுளம், தேனி வட்டாரங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் உரக் கடை நடத்துதல், பால்மாடு வளர்த்தல், உயிர் உரம் தயாரித்தல், சிறுதானியங்களை மதிப்பு கூட்டிபொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்கள் துவங்கலாம். அல்லது வேறு தொழில்களும் துவங்கலாம். இந்த சலுகையை பெற வேளாண், தோட்டக் கலை பட்டதாரிகள் என்பதை மாற்றி தற்போது பட்டப்படிப்பு படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர். வேளாண், தோட்டக்கலை, பொறியியல் வேளாண் பட்டம் பெற்றவர்களுடன், கலை அறிவியல் பட்டம் பெற்றவர்களும் தற்போது விண்ணப்பித்து பயன்பெறலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

