/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'காரசாரமின்றி' நடந்த கிராமசபை கூட்டங்கள்: பதவிக்காலம் முடிவதால் 'கப்சிப்' * ஊராட்சி பதவி காலம் முடிவதால் 'கப்சிப்'
/
'காரசாரமின்றி' நடந்த கிராமசபை கூட்டங்கள்: பதவிக்காலம் முடிவதால் 'கப்சிப்' * ஊராட்சி பதவி காலம் முடிவதால் 'கப்சிப்'
'காரசாரமின்றி' நடந்த கிராமசபை கூட்டங்கள்: பதவிக்காலம் முடிவதால் 'கப்சிப்' * ஊராட்சி பதவி காலம் முடிவதால் 'கப்சிப்'
'காரசாரமின்றி' நடந்த கிராமசபை கூட்டங்கள்: பதவிக்காலம் முடிவதால் 'கப்சிப்' * ஊராட்சி பதவி காலம் முடிவதால் 'கப்சிப்'
ADDED : அக் 03, 2024 06:34 AM

தேனி: மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்கள் 'காரசாரமின்றி' நடந்தன. ஊராட்சிகளில் பதவி காலம் நிறைவடைய இருப்பதால் தலைவர் உள்ளிட்ட பொறுப்பில் இருக்கும் பலர் அமைதியாகவே காணப்பட்டனர்.
ஊராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவி காலம் இந்தாண்டு இறுதியில் நிறைவடைகிறது. இதனால்,நேற்று நடந்த கிராம சபை கூட்டம் காரசாரமின்றி நடந்து முடிந்தது. பொது மக்களும் கேள்விகள் கேட்க ஆர்வமின்றி பங்கேற்றனர். பதவி காலம் நிறைவடைய உள்ளதால் ஊராட்சியில் பொறுப்பில் உள்ள வர்களும் அதிகம் பேசாமல் கூட்டத்தை விரைந்து முடித்தனர்.
தேனி:ஊஞ்சாம்பட்டி கிராம சபை கூட்டம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது. தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். துணை பி.டி.ஓ., பேபி முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், வேளாண்துறை அலுவலர்கள், பொது மக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தை ஊராட்சிச் செயலாளர் பாலசந்தர் ஒருங்கிணைத்தார்.
அரண்மனைப்புதுாரில் சமுதாய கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பிச்சை தலைமை வகித்தார். துணைத் தலைவர் காசிராஜன், டி.பி.டி.ஓ., மோனிகா முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு துணைத் தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர் பாண்டி, வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.
கொடுவிலார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரியா, ஒன்றிய உதவிப் பொறியாளர் பிரகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
தொழிலாளர் நலத்துறையினர், வேளாண், மருத்துவ அலுவலர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சிச் செயலாளர் வேல்முருகன் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நாகலாபுரம் ஊராட்சி சார்பில் பாலாகிருஷ்ணாபுரம் சமுதாய கூடத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவர் ஞானமணி தலைமை வகித்தார். டி.பி.டிஓ., மோனிகா, ஒன்றிய அலுவலக உதவியாளர் புஷ்பம் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர்கள், பொது மக்கள், ஊராட்சிச் செயலாளர் சுருளி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பதினெட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரியகுளம்: எண்டப்புளி ஊராட்சி கிராமசபை கூட்டம் தலைவர் சின்னப்பாண்டியன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் கோகிலா, ஊராட்சி செயலர் பிச்சைமணி, வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கீழவடகரை, வடபுதுப்பட்டி, லட்சுமிபுரம் உட்பட பிற ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
பேச்சு வார்த்தையில் முடிவு
ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி 12 வது வார்டில் மக்களுக்கு பிற வார்டுகளில் இருந்து வரும் கழிவுநீர் பள்ளிவாசல் முன் தேங்கி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டது. சீரமைக்காத ஊராட்சியை கண்டித்து செப்.29 ல் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். செப்.30 ல் ஒன்றிய உதவி செயற்பொறியாளர் சேகரன் சாக்கடை கட்டுவதற்கு அளவீடுகள் செய்தார். அவசர, அவசியம் கருதி தொடர்ந்து பணிகள் நடக்கவில்லை.
இதனால் இந்த வார்டு மக்கள் நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து ரோட்டோரம் காலை 9:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவக்கினர். ஊராட்சித் தலைவர் மகேஸ்வரி, 'சாக்கடை கட்டும் இடத்தில் பிரச்னை உள்ளது. இது
வருவாய்த்துறை சம்பந்தப்பட்டது.', என்றார். தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்லா, 'இதற்கு நீங்கள் (தலைவர்) தான் பொறுப்பேற்று கழிவு நீர் செல்லாமல் தடுக்க வேண்டும்., என்றார். நேற்று மாலை 5:00 மணி வரை நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தாசில்தார் மருதுபாண்டி உடனடியாக சாக்கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆண்டிபட்டி: ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளில் நடந்த கடைசி கூட்டங்கள் என்பதால் பொது மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்கவில்லை. ஊராட்சி நிர்வாகத்தினரும் பெயரளவில் கூட்டங்களை நடத்தி முடித்து விட்டனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: மார்ச் 24ல் உலக குடிநீர் தினத்தை முன்னிட்டும், நவம்பர் 1-ல் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கூடுதலாக இரு கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் முதல் தேதியில் கூட்டம் நடத்தப்படும். நேற்று மகாளய அமாவாசை என்பதால் கூட்டங்களில் பொது மக்கள் அதிகம் பங்கேற்க வில்லை. மழைக்காலம் துவங்குவதால் குடிநீரை காய்ச்சி குடிக்கவும், திறந்த வெளி கழிப்பிடம் பயன்படுத்துவதை தவிர்க்கவும், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 'ஜல் ஜீவன்' திட்டத்தில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்க உறுதி அளிக்கவும் வலியுறுத்தி அரசின் 4 தீர்மானங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது., என்றனர்.