/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திராட்சை விலை இறங்கு முகம்
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திராட்சை விலை இறங்கு முகம்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திராட்சை விலை இறங்கு முகம்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திராட்சை விலை இறங்கு முகம்
ADDED : ஆக 03, 2025 04:43 AM
கம்பம் : சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திராட்சை விலை கிலோவிற்கு ரூ.20 வரை குறைந்துள்ளது .
கம்பம் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பன்னீர் திராட்சை சாகுபடியாகிறது. ஒடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. திராட்சைக்கு கூடுதல் மழை, பனி சீதோஷ்ண நிலை பாதிப்பை ஏற்படுத்தும். லேசான மழை பெய்தாலும் விதையில்லா திராட்சை பழங்கள் உடையும்.
ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து சாரல் மழையும், வானம் மேக மூட்டமுமாக நிலவுகிறது, அதற்கு முன்பு மழை, வெயில் என மாறி மாறி இருந்தது. தற்போது பகல் இரவு என மாறிமாறி சாரல் உள்ளது. சீதோஷ்ண நிலையில் மாற்றம் உள்ளது. இதனால் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி கிராமங்களில் திராட்சை பூ பூப்பதில் தடங்கல் ஏற்பட்டு வரத்து குறைந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் இருந்து வரும் விதையில்லா திராட்சை வரத்து ஒரு மாதத்திற்கு முன்பே நின்றது. எனவே கம்பம் பன்னீர் திராட்சை விலை படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ.90 க்கும் மேல் சென்றது. ஆனால் தொடர் மழையால் ரூ 20 வரை குறைந்துள்ளது.
திராட்சை விவசாயிகள் சங்க தலைவர் முகுந்தன் கூறுகையில், ' ஒரு மாதத்திற்கு மேலாக சாரல் இருப்பதாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும், விலை உயர்வில் இருந்து சற்று குறைய துவங்கி உள்ளது. . தோட்டங்களில் பழம் வரத்தும் இல்லை. சாரல் மழை நின்றால் வரத்தும் அதிகரிக்கும். விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'என்றார்.