/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராயப்பன்பட்டி பனிமய மாதா தேர்பவனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
ராயப்பன்பட்டி பனிமய மாதா தேர்பவனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ராயப்பன்பட்டி பனிமய மாதா தேர்பவனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ராயப்பன்பட்டி பனிமய மாதா தேர்பவனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஆக 03, 2025 04:54 AM

உத்தமபாளையம் : ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச் பெருவிழா மற்றும் தேர்ப்பவனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக. 9 ல் தேர்ப்பவனி நடைபெறும்.
ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச் மிகவும் பழமையானது, பிரசித்தி பெற்றது. 1902 ல் கட்டப்பட்டது. இந்த சர்ச்சில் உள்ள வெண்கல மணி ஆயிரம் கிலோ எடை கொண்டது. பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள பனிமய மாதா சர்ச்சுகளில் ஆகஸ்ட் மாதம் அன்னை தேர்ப்பவனி நடைபெறும். தமிழகத்தில் தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் தேர்ப்பவனி மரத்திலான தேரில் நடைபெறுகிறது. மற்ற ஊர்களில் சப்பரத்தில் டிராக்டரில் நடைபெறும்.
ராயப்பன் பட்டியில் இதுவரை மாதா ஊர்வலம் சப்பரத்தில் வைத்து டிராக்டர் மூலம் நடைபெற்று வந்தது. கடந்தாண்டு ரூ.40 லட்சம் செலவில் 29 அடி உயரத்தில் 7 டன் எடையுள்ள மரத்திலான தேர் புதிதாக செய்யப்பட்டு, தேர்ப்பவனி நடைபெற்றது.
இந்தாண்டிற்கான பனிமய மாதா பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பாதிரியார் ஞானப்பிரகாசம் , கிராம கமிட்டி தலைவர் பிரபாகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு வாரத்திற்கு சிறப்பு பிரார்த்தனைகளும், விசேச நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
வரும் ஆக . 9 ல் பனிமய மாதா தேர்ப்பவனி நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.