ADDED : பிப் 15, 2024 06:13 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகில் உள்ள ஆனைமலையன்பட்டியில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதன் தாளாளராக ராயப்பன்பட்டியை சேர்ந்த பாக்கியம் மகன் பீட்டர் 49,உள்ளார். இந்த பள்ளி அருகில் உள்ள கல்வியியல் கல்லூரியும் நடத்தி வருகிறார்.
இந்த பள்ளிக்கு அருகில் இரவு நேரத்தில் விடுதி மாணவர்கள் நடந்து சென்ற போது அங்கு குடியிருக்கும் அசோக், நடராஜன், குணசேகரன் உள்ளிட்ட சிலர் தகராறு செய்துள்ளனர்.
தகவலறிந்த பள்ளி தாளாளர் பீட்டர் மற்றும் வார்டன் முத்துப் பாண்டி சென்று தட்டி கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் நடராஜனுக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. அவர் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் இரு தரப்பு புகாரில் இரு வழக்குகள் பதிவு செய்து மெட்ரிக் பள்ளி தாளாளர் பீட்டர் 49, வார்டன் முத்துப் பாண்டி 32, மற்றொரு தரப்பை சேர்ந்த சந்தோஷ், குணசேகரன் ஆகிய 4 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.

