/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீவனம் கிடைக்காமல் அலையும் மேய்ச்சல் மாடுகள்; கடும் வெப்பத்தால் தண்ணீருக்கும் சிக்கல்

ADDED : மார் 16, 2025 07:04 AM

கூடலுார்; கூடலுாரில் கடுமையான வெப்பத்தால் தீவனம் கிடைக்காமல் மேய்ச்சல் மாடுகள் அலைந்த வண்ணம் உள்ளன.
கூடலுார், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, ஊமையன் தொழு உள்ளிட்ட பகுதிகளில் தொழு அமைத்து ஆயிரக்கணக்கான மேய்ச்சல் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் காலையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்லப்படுகிறது. வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள நிலையில் ஒட்டியுள்ள விளைநிலங்களைச் சுற்றியே ஓட்டிச் செல்கின்றனர். கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவுவதால் பசுமையான தீவனம் கிடைப்பதில்லை. இதனால் பல கி.மீ., தூரம் தீவனத்திற்காக அலைய வேண்டிய நிலை உள்ளது. மேலும் நீண்ட தூரம் செல்லும்போது மாடுகளுக்கு தண்ணீரும் கிடைப்பதில்லை. தரிசாக போடப்பட்ட விளைநிலங்கள், அறுவடை செய்யப்பட்ட நிலங்களைத் தேடி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.