நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி திண்ணை பயிற்சிப்பட்டறை சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழிகாட்டுதல் வகுப்பு நடந்தது. அரசு துறைகளின் அடிப்படை செயல்பாடுகள், கலந்தாய்வில் எவ்வாறு துறைகள் தேர்வு செய்வது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது.
வகுப்பிற்கு திண்ணை தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். வருவாய்த்துறை, பத்திரபதிவுத்துறை, வேளாண், பள்ளிகல்வி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பேசினர்.

