நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கம்பம் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த கம்பம் மந்தையம்மன் கோவில் தெரு சாந்தி 42, உலகத்தேவர் முதல்தெரு பார்த்திபன் 50 ஆகியோரை ஜூன் 11லும், கோம்பை ரோடு அருண்பாண்டி 34 என்பவரை ஜூன் 2ல் போலீசார் கைது செய்தனர்.
எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையில், மூவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார். மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.