நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி விஸ்வதாஸ் நகர் பாண்டி. இவரது மகன் முத்தையா ஆட்டோ டிரைவர். பாண்டி சில மாதங்களுக்கு முன் இறந்தார். இவரது 16ம் நாள் துக்க அனுசரிப்பு நிகழ்ச்சி அக்.,ல் நடந்தது. நிகழ்விற்கு முதல்நாள் இவரது பேரன் முத்துப்பாண்டிக்கும், உறவினர் நவீன்குமார் 25,க்கும் கோழி பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறை முத்தையா விலக்கினார். அப்போது நவீன்குமார் கத்தியால் குத்தியதில் முத்தையா உயிரிழந்தார். நவீன்குமாரை தேனி போலீசார் கைது செய்தனர். எஸ்.பி., சினேஹா பிரியா பரிந்துரையில் கைதான நவீன்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார்.

