/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.1.67 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்; ராஜஸ்தான் வாலிபர் உட்பட மூவர் கைது

ADDED : அக் 16, 2024 03:59 AM

தேனி : தேனி கோடவுனில் பதுக்கிய ரூ.1.67 லட்சம் மதிப்பிலான 180 கிலோ எடையிலான 23 புகையிலை மூடைகளை போலீசார் கைப்பற்றினர். இதில் தொடர்புடைய வாழையாத்துப்பட்டி நாகராஜ் 55, அரண்மனைப்புதுார் பாண்டி 65, ராஜஸ்தான், ஜோத்பூரை சேர்ந்த அமர்சிங் 36, ஆகியோரை கைது செய்தனர்.
தேனி வாழையாத்துப்பட்டியில் குட்கா மற்றும் போதை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக தேனி டி.எஸ்.பி., சுரேஷ் தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.,இத்ரீஸ்கான், சிறப்பு எஸ்.ஐ.,கள் சம்சுதீன், மகேந்திரன் மற்றும் குற்றத்தடுப்பு போலீசார் தேனி -- குமுளி பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது டூவீலரில் சாக்குடன் வந்த ஆதிபட்டியை சேர்ந்த நாகராஜன் பரிசோதித்ததில் 12 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். அவர் அரண்மனைப்புதுார் வியாபாரி பாண்டியிடம் வாங்கி விற்பனை செய்வதாக தெரிவித்தார். பாண்டியை கைது செய்து அவரிடம் இருந்த குட்கா மூடைகளை கைப்பற்றினர். விசாரணையில் ராஜஸ்தான் ஜோத்பூரை சேர்ந்த அமர்சிங் என்பவர் கோடவுனில் வைத்து குட்கா வியாபாரம் செய்தவரிடம் வாங்கி விற்பனை செய்வதாக தெரிவித்தார். மூவரையும் கைது செய்த போலீசார், அமர்சிங்யின் சுப்பன்செட்டி தெரு கோடவுனில் இருந்த ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள 23 புகையிலை மூடைகளை கைப்பற்றினர். கோடவுனுக்கு 'சீல்' வைக்க டி.எஸ்.பி., தாசில்தாருக்கு பரிந்துரைத்துள்ளார்.