/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுரங்க பாலத்தில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார பாதிப்பு
/
சுரங்க பாலத்தில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார பாதிப்பு
சுரங்க பாலத்தில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார பாதிப்பு
சுரங்க பாலத்தில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார பாதிப்பு
ADDED : ஜன 23, 2024 05:04 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோடு ரயில்வே சுரங்க பாலத்தில் சாக்கடை கழிவு நீர் தேங்குவதால் அதனை கடந்து செல்லும் வாகனங்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறுமழை பெய்தாலும் அப்பகுதியில் சேரும் மழைநீர் பாலத்தில் தேங்கிவிடும். தேங்கிய நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தி விடுவர்.
கடந்த சில நாட்களாக ரயில்வே பாலம் அருகே உள்ள பாலாஜி நகரில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் சுரங்க பாலத்தில் தேங்குகிறது.
தேங்கும் கழிவு நீரை கடந்தே அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பொதுமக்கள், வாகனங்கள் செல்கின்றன.
சாக்கடை கழிவு நீரை மிதித்து செல்வதால் நோய் தொற்றுக்கான அபாயம் உள்ளது.
பாலத்தில் தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்தவும், தேங்குவதை தடுக்கவும் பேரூராட்சி, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை இல்லை.