/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரயில்வே சுரங்க பாலத்தில் கழிவு நீரால் சுகாதார பாதிப்பு
/
ரயில்வே சுரங்க பாலத்தில் கழிவு நீரால் சுகாதார பாதிப்பு
ரயில்வே சுரங்க பாலத்தில் கழிவு நீரால் சுகாதார பாதிப்பு
ரயில்வே சுரங்க பாலத்தில் கழிவு நீரால் சுகாதார பாதிப்பு
ADDED : பிப் 04, 2024 03:39 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோடு ரயில்வே சுரங்க பாலத்தில் கழிவு நீர் பெருகுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கழிவு நீரைக்கடந்து செல்ல முடியாமல் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர்.
மழைக்காலத்தில் ரயில்வே பாலத்தில் தேங்கும் நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அவ்வப்போது வெளியேற்றி வந்தனர். சிறு மழை பெய்தாலும் நீரை கடத்துவதில் தாமதம் ஏற்பட்டால் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் தற்போது ரயில்வே பாலத்தை அடுத்துள்ள நீர்வரத்து ஓடையில் செல்லும் கழிவுநீர் பாலத்தின் வழியாக கசிந்து தேங்கி விடுகிறது.
அன்றாடம் கழிவுநீரை அப்புறப்படுத்தினாலும் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் தேங்கி விடுகிறது. தேங்கி உள்ள கழிவுநீரை கடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ மாணவிகளுக்கு நோய்த்தொற்று அபாயம் உள்ளது.
கழிவு நீர் தேங்குவதால் கடந்து செல்லும் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
பாலத்தில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.