ADDED : ஆக 02, 2025 12:57 AM

போடி: மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இன்றி வெயில் தாக்கம் அதிகரித்து வந்தது.இந்நிலையில் நேற்று மதியம் தேனி,போடி பகுதியில் பெய்த சாரல் மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து வர
துவங்கியது.
போடி பகுதிதியில் 5 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் மானாவாரியாக தட்டப் பயறு, அவரை பயிரிட்டு இருந்தனர்.
அதன் பின் மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மழையை எதிர் நோக்கி காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 3:15 மணிக்கு தேனி, போடி, குரங்கணி, சிலமலை உள்ளிட்ட பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த பூமி குளிச்சி அடைந்தது. போடி காமராஜ் பஜார், போஜன் பார்க் உள்ளிட்ட மெயின் ரோட்டில் மழைநீர் சிறு ஓடை போல சென்றது. கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து வர துவங்கியது. சாரல் மழையானது 3:45 மணி வரை பெய்தது. இதுபோல நேற்று முன்தினம் மதியம் சாரல் மழை பெய்தது. மழையை எதிர்நோக்கி இருந்த விவசாயிகளுக்கு மழை மகிழ்ச்சியை தந்துள்ளது.

