/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கனமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்
/
கனமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்
ADDED : டிச 14, 2024 06:37 AM
தேனி : மாவட்டத்தில் டிச.13, 14 ஆகிய நாட்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என, ஆரஞ்ச் அலெர்ட்' வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனால் வடகிழக்கு பருவ மழை காலத்திற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தேனியில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. இதில், அனைத்து வட்டாரங்களில் உள்ள கண்மாய், குளங்கள், ஊரணிகளில்நிர் நிரம்பி உள்ளதா எனவும், வெள்ளப் பெருக்கின் போது அவசர கால பணியினை மேற்கொள்ள துறையினருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறுகளில் திடீரெனவெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைஆற்றின் பக்கம் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என உள்ளாட்சிஅமைப்புகள் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது மக்கள் புகார்களை 1077, 04546 - 261093, 250101 என்ற தொலைபேசி எண்களில்தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

