/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் கன மழை எச்சரிக்கை நீர்நிலை, சாகச சுற்றுலாவுக்கு தடை
/
இடுக்கியில் கன மழை எச்சரிக்கை நீர்நிலை, சாகச சுற்றுலாவுக்கு தடை
இடுக்கியில் கன மழை எச்சரிக்கை நீர்நிலை, சாகச சுற்றுலாவுக்கு தடை
இடுக்கியில் கன மழை எச்சரிக்கை நீர்நிலை, சாகச சுற்றுலாவுக்கு தடை
ADDED : ஜூன் 14, 2025 05:52 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் கன மழை முன்னெச்சரிக்கையால் நீர்நிலை, சாகச சுற்றுலாவுக்கு ஜூன் 17 வரை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இம்மாவட்டத்தில் ஜூன் 17 வரை பலத்தமழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. அதனால் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கவும், மண் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றிற்கு வாய்ப்புள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி படகு சவாரி உள்பட நீர்நிலை சுற்றுலாவுக்கும், டிரெக்கிங் உள்பட சாகச பயணத்திற்கும் ஜூன் 17 வரை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு கேப்ரோட்டில் இரவு நேர பயணத்திற்கும், பகலில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஜூன் 17 வரை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.