/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கனரக வாகனங்களால் போடியில் போக்குவரத்து இடையூறு
/
கனரக வாகனங்களால் போடியில் போக்குவரத்து இடையூறு
ADDED : ஜூன் 28, 2025 11:53 PM
போடி: போடி பஸ்ஸ்டாண்டில் இருந்து குப்பிநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் கனரக வாகனங்களை நிறுத்துவதால் பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர்.
போடி குப்பிநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை, வர்த்தக நிறுவனங்கள், பாங்குகள் உள்ளன. இந்த ரோட்டின் இருபுறமும் கடை வைத்துள்ளவர்கள் ரோட்டின் முன்பாக விளம்பரம் போர்டுகள், வாகனங்கள் நிறுத்தி உள்ளனர். சரக்கு லாரி, ஜீப்கள் நிறுத்துவதால் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்லவும், பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர்.இந்த ரோட்டில் காலை, மாலை பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்லக் கூடாது.
மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தும் கனரக வாகன ஓட்டிகள் கண்டு கொள்வது இல்லை. பள்ளி மாணவர்களின் சிரமங்களை தவிர்க்க காலை, மாலையில் கார், ஜீப், சரக்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லவும், நிறுத்துவதை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.