/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உயர் அழுத்த மின் கேபிள் முறையாக பதிக்காததால் மலைவாழ் மக்கள் அச்சம்
/
உயர் அழுத்த மின் கேபிள் முறையாக பதிக்காததால் மலைவாழ் மக்கள் அச்சம்
உயர் அழுத்த மின் கேபிள் முறையாக பதிக்காததால் மலைவாழ் மக்கள் அச்சம்
உயர் அழுத்த மின் கேபிள் முறையாக பதிக்காததால் மலைவாழ் மக்கள் அச்சம்
ADDED : ஏப் 13, 2025 05:25 AM

மூணாறு : உயர் மின் அழுத்த கேபிளை முறையாக பதிக்காததால் மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் உள்ள இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். அங்கு இடலிபாறைகுடி, சொசைட்டிகுடி, ஆண்டவன் குடி, ஷெட்குடி ஆகிய பகுதிகளுக்கு மட்டும் சமீபத்தில் மின்சாரம் வழங்கப்பட்டது. அதற்கு ராஜமலை பெட்டிமுடி பகுதி முதல் கிராமங்கள் வரை உயர் மின் அழுத்தம் கொண்ட கேபிள் நிலத்தடியில் பதித்து மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
சொசைட்டிகுடி பகுதியில் ரோட்டில் கேபிள் முறையாக பதிக்கவில்லை என்பதால் ரோட்டில் கடந்து செல்கிறது.
வாகனங்கள் செல்வதாலும், வனவிலங்குகள் நடமாட்டத்தாலும் கேபிள் பல இடங்களில் சேதமடையும் நிலையில் உள்ளன. தவிர மலைவாழ் மக்கள் சிறுவர்கள் விறகு சேகரிக்க உள்பட பல்வேறு தேவைகளுக்கு கத்திகளை எடுத்துச் செல்வதுண்டு. அவர்கள் விளையாட்டாக கேபிள்களை வெட்டவும் வாய்ப்புள்ளது.
இது போன்று பல்வேறு விதங்களில் ஆபத்தாக காணப்படும் கேபிள்களை முறையாக பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் மின்துறை அதிகாரிகள் மலைவாழ் மக்களின் உயிருடன் விளையாடி வருகின்றனர்.