ADDED : ஜூலை 27, 2026 12:17 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி அல்லிநகரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனம் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரி ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் உமையராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகன், நிர்வாகிகள் நாகராஜ், விஷ்ணு பிரியன், திலகராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
