/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஹிந்து எழுச்சி முன்னணி ஆர்ப்பாட்டம்
/
ஹிந்து எழுச்சி முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 18, 2024 01:41 AM

தேனி: பெரியகுளத்தில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விதிமீறி மத அடையாளங்களை வலியுறுத்தும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பையா, நகரத் தலைவர் செல்வபாண்டியன், நகர பொருளாளர் ராஜேஷ்குமார், நகர பொதுச் செயலாளர் சிவராமன், துணைத் தலைவர் நாகராஜ், நகர அமைப்பாளர் முத்துராஜ், நகரச் செயலாளர் கோட்டைசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நிர்வாகிகள் கலெக்டர் அலுவலக பொது மேலாளர் ஜஸ்டின்சாந்தப்பாவிடம் மனு அளித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.