/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஹிந்து எழுச்சி முன்னணி சப்-- கலெக்டரிடம் மனு
/
ஹிந்து எழுச்சி முன்னணி சப்-- கலெக்டரிடம் மனு
ADDED : நவ 08, 2024 04:43 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோயில் அருகே மாற்று மதத்தினர் சமாதி கட்டி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஹிந்து எழுச்சி முன்னணியினர் சப்-கலெக்டர் ரஜத் பீடனிடம் மனு அளித்தனர்.
ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்டத்தலைவர் ராமராஜ் தலைமையில் அளித்த மனுவில், 'பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோயில் 700 ஆண்டுகளுக்கு முன் கரட்டில் அமைந்துள்ளது. மலைக்கோயிலை அறக்காவலர்களான நாங்களும், முன்பு இருந்த அறங்காவலர்கள் பூஜைகள் செய்து வருகிறோம்.
1941 ல் கோயிலுக்கான மணி மண்டபம் முன்னோர்கள் கட்டினர். கோயிலை தாமரைக்குளம் வெங்கடாசலபதி நிர்வாக குழு பராமரிப்பு அறக்கட்டளையினர் பராமரிப்பில் வைத்துள்ளனர். கோயில் வளாகத்தில் விநாயகர், முருகன் கோயில், ஆண்டாள் பீடம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். தற்போது தமிழக அரசு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்நிலையில் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு அருகாமையில் புறம்போக்கு நிலத்தில்
சமாதி கட்டுவதற்கு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.-