/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி மலைப் பகுதிகளில் பாக்கு மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் வீட்டில் இருந்தே வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள்

ADDED : மார் 04, 2024 06:27 AM

போடி: போடி அருகே மலையோர பகுதியில் பாக்கு மரங்கள் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், வீட்டில் இருந்தபடி பாக்கு உரிக்கும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
போடி அருகே குரங்கணி, கொட்டகுடி, முந்தல், பிச்சாங்கரை, ஊத்தாம்பரை, கொம்புதூக்கி உள்ளிட்ட மலைப் பகுதிகளில்பாக்கு மரங்கள் வளர்த்து வருகின்றனர். பாக்கு மரம் நாற்று வைத்து 3 ஆண்டுகளில் பலன் தர துவங்கி விடும்.
பாக்கு சீசன் ஜூனில் துவங்கிஜனவரிஇறுதி வரை இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை உரிக்காத பாக்கு கிலோ ரூ. 25 முதல் 30 வரை இருந்தது. தற்போது கிலோ ரூ. 45 முதல் ரூ.50 வரை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
முமு பாக்கினை அரிவாள்மனை அல்லது கத்தி மூலம் தோலை அகற்றி கொட்டை பாக்கு, சுருள் பாக்கு என சிறிது சிறிதாக அறுத்து தரம்பிரிக்கின்றனர். கூலித் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.150 முதல் 200 வரையும், வீட்டில் வேலை இல்லாத போது ரூ. 300 வரை பெண்கள் சம்பாதிக்கின்றனர். மாதம் ரூ. 3000 முதல் 5000 வரை வருமானம்கிடைக்கிறது.போடி பகுதியில் பாக்கு உரிக்கும் தொழிலில் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாக்கிற்கு நல்ல விலை கிடைப்பதால் பாக்கு மரங்கள் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.