/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் பத்தரை ஆண்டுக்கு பின் பயன்பாட்டிற்கு வரும் தங்கும் விடுதி
/
மூணாறில் பத்தரை ஆண்டுக்கு பின் பயன்பாட்டிற்கு வரும் தங்கும் விடுதி
மூணாறில் பத்தரை ஆண்டுக்கு பின் பயன்பாட்டிற்கு வரும் தங்கும் விடுதி
மூணாறில் பத்தரை ஆண்டுக்கு பின் பயன்பாட்டிற்கு வரும் தங்கும் விடுதி
ADDED : நவ 23, 2024 06:22 AM

மூணாறு; ஓராண்டுக்குள் பணி முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கிய தங்கும் விடுதியின் கட்டுமான பணிகளை பூர்த்தி செய்ய பத்தரை ஆண்டுகள் ஆன நிலையில் நவ.30ல் திறக்க முடிவு செய்யப்பட்டது.
மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு வசதியாக அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் சுற்றுலா துறை தங்கும் விடுதி கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளை 2014 ஜூலை 4ல் அப்போதைய சுற்றுலா துறை அமைச்சர் அனில்குமார் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக பத்து அறைகள், கூட்ட அரங்கம், ஓட்டல் ஆகியவை கட்ட ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது.
அப்பணிகள் ஓராண்டுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு பூர்த்தி செய்யும்பட்சத்தில் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோருக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்குவதாக அமைச்சர் கூறினார். ஆனால் பணிகளை பூர்த்தி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனிடையே மூணாறில் 2018ல் நீலக் குறிஞ்சி பூக்கள் சீசன் குறித்து ஆலோசனை நடத்த வந்த அன்றைய சுற்றுலா துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் 2018 நவம்பரில் தங்கும் விடுதி பயன்பாட்டிற்கு வரும் என கூறினார்.
இரு அமைச்சர்களின் பேச்சும் செயல் வடிவம் பெறாத நிலையில், பணிகளை பூர்த்தி செய்ய பத்தரை ஆண்டுகள் ஆனது. தற்போது பணிகள் பூர்த்தியானதால் தங்கும் விடுதியை சுற்றுலாதுறை அமைச்சர் முகம்மதுரியாஸ் நவ.30 திறந்து வைக்க உள்ளார்.

