/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவியை கம்பியால் அடித்த கணவர் கைது
/
மனைவியை கம்பியால் அடித்த கணவர் கைது
ADDED : ஆக 03, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை 42, இவரது மனைவி முத்து 36, இவர்களுக்கு திருமணம் ஆனதிலிருந்தே தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து உதைப்பது வழக்கம். இதனால் தனது குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு, முத்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
அதே ஊரில் உள்ள தனது மனைவியை வேலைக்கு போகும் போது தகராறு செய்வது வழக்கம் .
நேற்று முன்தினம் வேலைக்கு சென்று கொண்டிருந்த தனது மனைவியை கம்பியால் அடித்து தாக்கினார்.அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விலக்கி விட்டுள்ளனர்.
காயம்பட்ட முத்து சின்னமனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிங்கதுரையை கைது செய்தனர்.